சேஷம்பாடி ஊராட்சியில் ரூ.95 லட்சத்தில் மின்கம்பம் அமைக்கும் பணி எம்.பி, எம்எல்ஏ அடிக்கல்

கும்பகோணம், ஜன.8: கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் மின்சார கம்பம் அமைக்கும் பணியை எம்பி மற்றும் எம்எல்ஏ ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் சேஷம்பாடி ஊராட்சியில் அய்யன் திருவள்ளுவர் நகரில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் மின்சார கம்பம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் எம்எல்ஏவுமான சாக்கோட்டை அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் மற்றும் முன்னாள் எம்.பி.ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். தொடர்ந்து மின்சார கம்பம் அமைத்திடும் பணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் அடிக்கல் நாட்டில் பணியை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

 

Related Stories: