விக்கிரமங்கலம் அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

தா.பழூர், ஜன. 8: விக்கிரமங்கலம் பகுதியில் மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முத்துவாஞ்சேரி விஏஓ கலைச்செல்வி. இவருக்கு முத்துவாஞ்சேரி கொள்ளிடம் ஆற்று படுகை பகுதிகளில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கொள்ளிடம் ஆற்றுக்கு செல்லும் பாதையில் கலைச்செல்வி ஆய்வு செய்தார்.

அப்போது எதிரே வந்த மாட்டு வண்டியை மறித்து சோதனை செய்ய முயற்சி செய்தார். விஏஓவை கண்டவுடன் மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர் சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். கிராம நிர்வாக அலுவலர் விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் எஸ்ஐ காமராஜ் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Related Stories: