மாதவரம்: சென்னை மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட பஜார் தெருவில் உள்ள ரேஷன் கடையில் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ ஆய்வு செய்தார். அப்போது பொருட்களை வாங்க வரிசையில் நின்றிருந்த குடும்ப அட்டைதாரர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
‘’உணவுப்பொருள் விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்படும் கைரேகை இயந்திரம் சரியாக வேலை செய்யாததால் உணவு பொருள் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது’ என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டபோது, ‘’சில நேரங்களில் நெட்வொர்க் இணைப்பு தடை காரணமாக பொருட்கள் விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுகிறது’ என்றனர்.
‘’பொதுமக்களை நீண்டநேரம் காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் உணவு பொருட்களை விநியோகிக்க வேண்டும்’’ என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதன்பின்னர் பஜார் தெருவுக்கு சென்றுமுதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படும் பணியை ஆய்வு செய்தார்.
