ஒரத்தநாடு, ஜன.7: நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் அனுராதா தொடங்கி வைத்தார். இதில், துணை தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள், உடற்கல்வி இயக்குனர் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பேரணி ஒரத்தநாடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வழியாக சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் தலைக்கவசம் உயிர்க்கவசம், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி சென்றனர்.
