அமெரிக்காவை கண்டித்து புதுகையில் இந்தியக் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜன.7: புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் வெனிசுலாமீது தாக்குதல் நடத்தி அதிபரை கைது செய்து நாடு கடத்திய அமெரிக்கா ஏகாதிபத்திய சர்வதிகாரி டிரம்ப்பை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செங்கோடன் தலைமை வகித்தார் . மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் தர்மராஜன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் மாதவன், மற்றும் பலர் கலந்து கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் டிரம்புக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

Related Stories: