காரைக்குடி, ஜன.6: காரைக்குடியில் கொலைக்கு பழிக்குப் பழிவாங்க காத்திருந்த 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்து வாளை பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேர்வார் ஊரணியை சேர்ந்தவர் மனோ (எ) மனோஜ்குமார். இவரை கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் அண்ணாநகரை சேர்ந்த குருபாண்டி மற்றும் சிலர் சேர்ந்து வெட்டி கொலை செய்தனர். இக்கொலையில் ஈடுபட்ட குருபாண்டி உள்பட சிலர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலை் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மனோஜ்குமாரின் கொலைக்கு பழிக்குப் பழிவாங்க அவரது சகோதரர் குணா உள்பட 7 பேர் திட்டம் தீட்டி ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருந்தனர். இதுபற்றிய தகவல் காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனால் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து, 7 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 வாள், ஒரு கார், 6 செல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர்.
