தவ்ஹீத் ஜமாத் கூட்டம்

காரைக்குடி, ஜன.6: காரைக்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற தலைப்பில் பிற மத சகோதர சகோதரிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் அப்துல்சித்திக் தலைமை வகித்தார். பொருளாளர் முகமது இஸ்மாயில், துணைச் செயலாளர்கள் முகமது, சிகாபுதீன், புரூனை மாண்டலத் தலைவர் மின்னத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேள்வி பதில் நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சபீர்அலி இஸ்லாம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். நிகழ்ச்சியை காரைக்குடி கிளை நிர்வாகிகள் நாசர், சாதிக், ஹபீப், பாரூக், சாதிக் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: