தஞ்சாவூர், ஜன.5: மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இந்த பகுதியிலிருந்து மின் விநியோகம் பெறும், வல்லம், வல்லம் புதூர், மொன்னையம்பட்டி, குரும்பூண்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், சாஸ்த்ரா காலேஜ் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோல், செங்கிப்பட்டி துணை மின் நிலையத்திலும் சிறப்பு பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டாம்பட்டி, ராயராம்பட்டி, சானூரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, செங்கிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
