தூய்மை பணியாளர் வீட்டில் திருட்டு

 

மாதவரம், ஜன.5: சென்னை வியாசர்பாடி கென்னடி நகரை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (21). தூய்மை பணி செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது அவரது வீட்டில் இருந்த 2000 ரூபாய், 2 கிராம் செயின், வெள்ளி கொலுசு திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: