சந்திரகிரகண நேரத்தில் முருகனை தரிசனம் செய்யலாம்

திருத்தணி,மார்ச் 3: சந்திர கிரகணத்தையொட்டி இன்று பெரும்பாலான கோயில்கள் நடை சாத்தப்பட்டு பூஜைகளுக்கு பின்னர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்தந்த கோயில்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கு மாறாக முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில், சந்திர கிரகணம் ஏற்பட்டாலும் கோயில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கிரகணம் முடிந்த பின்னர் கோயில் தூய்மைபடுத்தப்பட்டு சாமிக்கு பூஜைகள் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: