உலக பியுச்சர்ஸ் குத்துச்சண்டை இந்திய வீரர்கள் வெற்றி

 

பாங்காக்: உலக பியுச்சர்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ராதாமணி, சாஹில் வெற்றி பெற்றனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் யூத் குத்துச்சண்டை பியுச்சர்ஸ் போட்டி நடக்கிறது. நேற்று நடந்த மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் ராதாமணி லாங்ஜம், ஆடவர் 60 கிலோ பிரிவில் சாஹில் துஹான் 5-0 வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். 55 கிலோ பிரிவில் இந்தியாவின் உத்தம் சிங் 2-3 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பான் வீரரிடம் தோல்வியை தழுவினார்.

Related Stories: