சென்னை: மோடி தலைமையிலான பா.ஜ.க.அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மக்கள் நலனை பாதிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். ‘இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாய விலை மறுப்பு. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாதவர் நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அதனால்தர்ன மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுகிற வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் அமைந்துள்ளது’ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
