வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

விருத்தாசலம், டிச. 30: விருத்தாசலம் அருகே உள்ள முதனை கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி மகன் உத்ராபதி(35). இவர் அருகே உள்ள குப்பநத்தம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த புகழ் அரசி என்பவரை திருமணம் செய்து கொண்டு மனைவியின் ஊரிலேயே வசித்து வந்துள்ளார். இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் உத்திராபதிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் தினமும் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி அன்று குடித்து விட்டு வந்த உத்ராபதியை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த உத்தராபதி ரூமுக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ரூமுக்கு சென்று பார்த்தபோது உத்திராபதி சுடிதார் சாலில் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இதுகுறித்து அவரது அண்ணன் ரவி கொடுத்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: