சிறுவர் ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவேற்றம்; வளர்ப்பு நாய்களுடன் ‘தகாத’ உறவில் இருந்த நடிகர் கைது: அமெரிக்காவில் போலீஸ் அதிரடி

வாரன் கவுண்டி: சிறுவர் ஆபாசப் படங்களை இணையத்தில் பரப்பியதாகவும், வளர்ப்பு நாய்களுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும் பிரபல ரியாலிட்டி ஷோ நடிகர் நபர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஜோடிகள் குறித்து ஒளிபரப்பான ‘நெய்பர்ஸ் வித் பெனிபிட்ஸ்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் டோனி மெக்காலிஸ்டர், கடும் எதிர்ப்பு காரணமாக இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி வெறும் 2 அத்தியாயங்களுடன் பாதியிலேயே நிறுத்தப்பட்டார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி இவர் மீது ஆபாசப் படங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து வாரன் கவுண்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், இவர் தனது கூகுள் கணக்கில் சிறுவர் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்ததாகவும், தான் வீட்டில் வளர்த்து வந்த 2 நாய்களுடன் தகாத முறையில் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும் போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து ஷெரிப் பாரி ரிலி கூறுகையில், ‘விசாரணைக்காக வீட்டில் இருந்த நாய்கள் மீட்கப்பட்டு அதிகாரிகளால் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன’ என்றார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் பிணைத் தொகையும், இனிமேல் சிறுவர்கள் மற்றும் விலங்குகளுடன் தொடர்பில் இருக்கத் கூடாது என தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Stories: