சென்னை: மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட ஒன்றிய- மாநில அரசுகள் முன்வர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: கடலோர பகுதிகளில் வசித்து வந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், அளவிடவே முடியாத அளவிற்கான உடைமைகளையும் பறித்துச் சென்றதோடு, தமிழக மக்களின் ஆழ்மனதில் இன்றளவும் ஆறாத ரணமாகப் பதிந்திருக்கும் சுனாமி எனும் ஆழிப்பேரலை நிகழ்த்திய கோரத் தாண்டவத்தின் நினைவுதினம். காலத்தால் மறக்க முடியாத அளவிற்கு வலியை தந்ததோடு, பாதிப்பிலிருந்து மீளவே முடியாத அளவிற்கு பேரழிவையும், பேரிழப்பையும் ஏற்படுத்திய சுனாமியால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நேரத்தில், உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதமில்லாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், வாழ்க்கைத்தரம் உயரவும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திட ஒன்றிய, மாநில அரசுகள் முன்வரவேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுனாமி நினைவு தினம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட முன்வர வேண்டும்: ஒன்றிய, மாநில அரசுகளுக்கு டிடிவி.தினகரன் கோரிக்கை
- சுனாமி நினைவு நாள்
- TTV
- தின மலர்
- யூனியன்
- மாநில அரசுகள்
- சென்னை
- AMMK
- பொதுச்செயலர்
- டி.டிவி தீனகரன்
- அரசாங்கங்கள்
