பெண்களை கொச்சைப்படுத்தி பேசி தொடர் சர்ச்சையில் சிக்கும் சி.வி.சண்முகம் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை பாயுமா?

 

விழுப்புரத்தில் தேஜ கூட்டணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ேபசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி, ‘உங்க கனவை சொல்லுங்க. அதை நிறைவேற்றுவதாக கூறுகிறார். ஆமாம் எனக்கு நயன்தாரா வேண்டும், அதை நிறைவேற்றுவாரா’ என பேசினார். இத்தகைய அவரது சர்ச்சை பேச்சால் கொந்தளித்த மகளிர் அமைப்புகள், தொடர் போராட்டத்திற்கு தயாராகின. அடுத்த சில மணிநேரத்தில் வருத்தம் தெரிவித்த சி.வி.சண்முகம், ‘ஒரு புளோவில் தவறுதலாக வந்துவிட்டது. எந்தவிதமான உள்நோக்கத்துடனும் இதனை கூறவில்லை. இதற்கு மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

சி.வி.சண்முகம் எம்பி, தொடர்ந்து இதேபோல் தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும், பெண்களை உதாசீனப்படுத்தியும், அநாகரீகமாகவும், இழிவுப்படுத்தி பொது இடத்தில் பேசி சர்ச்சையில் சிக்கும் நிலையில், தற்போது தேர்தல் நேரத்தில் அவரது உளறல் அதிமுகவுக்கு மட்டுமின்றி கூட்டணி கட்சிகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சி.வி.சண்முகம் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை அதிமுகவில் வலுத்து வருகிறது. வரும் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்துள்ள சி.வி.சண்முகம், அங்கும் மகளிர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் அவருக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

Related Stories: