திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை: எம்எல்ஏ கிருஷ்ணசாமி பங்கேற்பு

திருவள்ளூர், டிச.25: புல்லரம்பாக்கத்தில், திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் `என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பரப்புரை நிகழ்ச்சியில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்றார்.
திமுக சார்பில் வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் `என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பரப்புரை துவக்கபட்டுள்ளது. அதன்படி, மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் ஆலோசனையின்பேரில், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், புல்லரம்பாக்கம் ஊராட்சியில் `என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பரப்புரையை மேற்கொண்டனர். ஒன்றிய செயலாளர் முரளிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த, பரப்புரையில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆலோசனைகளை வழங்கி, பேசினார். அப்போது, பொதுமக்களால் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். நிகழ்வில் மாவட்ட, ஒன்றியம், கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: