சென்னை: எம்ஜிஆரின் 38வது நினைவு நாளையொட்டி இன்று சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 38வது நினைவுநாளையொட்டி இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தொண்டர்கள் சென்னை, மெரினா கடற்கரை அருகே உள்ள அவரது சமாதிக்கு ஊர்வலமாக சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். எடப்பாடி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கருப்பு நிற உடை அணிந்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் உறுதியேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவை சேர்ந்த ஒரு பிரிவினர் இன்று காலை 11 மணிக்கு சென்னை, கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் அவரது ஆதரவு நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
