பதவியேற்ற பின் 11 தேர்தல்களில் தோல்வி மட்டுமே எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்வதற்கே வெட்கமாக உள்ளது: சரியான பாடம் புகட்டுவோம், ஓபிஎஸ் பேச்சு

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ், நேற்று சென்னை, வேப்பேரியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டர். இந்த கூட்டத்தில் பேசிய ஆதரவாளர்கள், ‘தேசிய ஜனநாயக கூட்டணி வேண்டாம்’ என்று தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: அதிமுக இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தொகுதிகளில் 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. 14 தொகுதிகளில் 3வது இடத்திற்கு சென்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி என்ற பெயரை சொல்வதற்கே வெட்கமாக உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு 11 தேர்தல்களில் தோல்வியை சந்தித்து உள்ளார். தற்போது அதிமுகவினர் திக்குமுக்காடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த நிலையை உருவாக்கிய பழனிசாமிக்கு வரும் காலங்களில் நாம் சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்பது தான் வரலாறு. இன்று மக்கள் நம் மீது மிகுந்த அக்கறை கொண்டு இருக்கிறார்கள். இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேசிய கருத்துக்களை நானும் வழிமொழிந்து ஏகமனதாக தீர்மானமாக நிறைவேற்றுவோம் என்றார்.

* ‘அதிமுகவுடன் இணைய மாட்டோம்’
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசுகையில், ‘குரங்கு கையில் சிக்கிய பூமாலையாகிவிட்டது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பழனிசாமி இருக்கும் அதிமுகவில் நாங்கள் ஒன்றிணைய மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories: