திருச்சி: ஜன 6க்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று நிருபர்களுக்கு அளித்த ஒன்றிய அரசு கல்வியில் 20 நோக்கத்தை அடைய வேண்டும் எனக்கூறுகிறார்கள். அதில் நாம் 19 அடைந்து விட்டோம். கேரளா இருபதையும் அடைந்து விட்டது. ஆனால் இந்த இரு மாநிலங்களுக்கு தான் ஒன்றிய அரசு கல்வி நிதியை ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தமிழக முதலமைச்சர் நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுப்பார். பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிக்கு தற்போது ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பள்ளிகளின் நுழைவாயில் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். ஜாக்டோ ஜியோ ஜனவரி 6ம்தேதி முதல் கால வரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். ஜனவரி 6ம் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்வர் தெரிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
