டூவீலரில் ரூ.57 லட்சம் ஹவாலா பணம்

மதுக்கரை: கோவை அடுத்த வேலந்தாவளம் சோதனைச்சாவடியில் நேற்று காலை 11 மணியளவில் க.க.சாவடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளா நோக்கி வந்த டூவீலரை போலீசார் நிறுத்த முயன்றனர். நிறுத்தாமல் யூடர்ன் அடித்து சென்றதால், சிறிது தூரம் துரத்திச்சென்று மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இதில் சீட்டுக்கு அடியில் ரகசிய அறை அமைத்து ரூ.57 லட்சத்தை 500 ரூபாய் கட்டுகளாக அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அதற்குரிய ஆவணங்கள் இல்லை. விசாரணையில், கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்த தங்கநகை வியாபாரி ஹம்சா என்பவரது மகன் சபிக் (38) என்பதும், நகைகள் விற்ற பணத்தை முறையாக பில் இல்லாமல் கொண்டு வந்ததால் சிக்கிக் கொள்வோம் என பயந்து சீட்டுக்கு அடியில் மறைத்து எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வருமான வரித்துறைக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் வந்ததும் அவர்களிடம் சபீக் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை போலீசார் ஒப்படைத்தனர்.

Related Stories: