உழவர் நலனை காக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு: உழவே தலை – உலகத்தவரின் பசிப்பிணி போக்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள். வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை, வேளாண் வணிகத் திருவிழா, வேளாண் கண்காட்சி, உழவன் செயலி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், இலவச மின்சார இணைப்புகள் என உழவர்களுக்காக நமது திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் வேளாண் உற்பத்தியில் தொடர்ந்து சாதனை புரிகிறது தமிழ்நாடு. உழவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ. அரசுக்கு எதிராகவும் போராடி, உழவர் நலனை பாதுகாக்கிறோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை குலைத்து விவசாய கூலித்தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பா.ஜ. அரசை கண்டித்து நாளை (இன்று) ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. உழவர் நலனைக் காக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: