பதிவுத்துறை கூடுதல் ஐஜி நல்லசிவன் உட்பட 2 பேருக்கு ஐஏஎஸ் அதிகாரி பதவி

சென்னை: தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி அளித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய ஆட்சிப் பணிக்கு நேரடியாக யுபிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களைத் தவிர மாநிலத்தில் குரூப் 1 தேர்வு மூலம் வருவாய் துறை பணியில் சேருகிறவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை குரூப் 1 தேர்வில் வருவாய் துறை தவிர மற்ற துறைகளில் குரூப் 1 தேர்வு மூலம் பணியில் சேர்ந்த சிலருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்படும். 2024ம் ஆண்டுக்கான தேர்வுப் பட்டியலின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில சிவில் சேவையில் பணியாற்றி வந்த 2 அதிகாரிகள் இந்திய நிர்வாக சேவைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இந்த நியமனங்கள், இந்திய ஆட்சிப்பணி விதிகள், 1954ன் விதி 8(2), பதவி உயர்வின் மூலம் நியமனம் தொடர்பான ஒழுங்குமுறை மற்றும் பணியாற்றும் பயிற்சி விதிகள் ஆகிய 3 விதிகளின் அடிப்படையில் குடியரசு தலைவரால் வழங்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் ஆலோசனையுடன், 2024 ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை ஏற்பட்ட காலியிடங்களை நிரப்பும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி பதிவுத்துறை கூடுதல் தலைவராக உள்ள நல்லசிவன், ஊரக வளர்ச்சி வளர்ச்சி அமைச்சர் பிஏவான அப்துல் ராசிக் ஆகிய இருவருக்கும் ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: