ஆஷஸ் 4வது டெஸ்ட் ஆஸி கேப்டனாக ஸ்மித்

மெல்போர்ன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் 3 போட்டிகளிலும், ஆஸி வென்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. இந்த அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், இப்போட்டியில் ஆடும் ஆஸி அணி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ், நாதன் லியான் ஆகியோர் பெயர்கள் இடம்பெறவில்லை. பேட் கம்மின்ஸ் முதுகு வலியால் அவதிப்படுவதாலும், லியானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாலும், அவர்கள் அணியில் இடம்பெறவில்லை. இதையடுத்து, ஆஸி கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். தவிர, வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன், சுழல் பந்து வீச்சாளர் டாட் மர்பி ஆகியோரின் பெயர்கள் ஆஸி அணி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

Related Stories: