நாளை முதல் 2 நாட்கள் கனிமொழி எம்பி தேர்தல் பிரசாரம் சத்திரக்குடியில் பொதுக்கூட்டம்

பரமக்குடி, ஜன.21: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், பரமக்குடி, ராமநாதபுரம், திருவாடனை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும், திமுக தலைவர் ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தேர்தல் பிரசார பயணத்திற்கு நாளை வருகிறார். 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசார பயணத்தில், முதல் நாள்  சாயல்குடி வர்த்தகர்கள் சந்திப்பு மற்றும் நடைபயணம். வாலிநோக்கம் உப்பள தொழிலாளர்களுடன் சந்திப்பு. கடலாடியில் வேன் பிரசாரம்.

பிற்பகல் 3 மணிக்கு முதுகுளத்தூர் மாங்குடி மதியழகன் குடும்பத்துடன் சந்திப்பு. தொடர்ந்து, முதுகுளத்தூரில் வேன் பிரசாரம். பிற்பகல் 3.45 மணிக்கு பாம்பூர் சமத்துவபுரத்தில் தேர்தல் பிரசாரம், தொடர்ந்து, பரமக்குடி வருகை தரும் கனிமொழி எம்பி நெசவாளர்கள் கூட்டமைப்பினர் சந்திப்புக்கு பின்,பரமக்குடி தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

பின்னர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த உரப்புளி கிராமத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் ராஜேஷ்குமார் குடும்பத்துடன் சந்திப்பு. தொடர்ந்து போகலூர் ஒன்றிய தலைவர் சத்தியா ஏற்பாடு செய்துள்ள  செங்கல் சூளை பணியாளர்களுடன் மஞ்சூரில் சந்திப்பு, தொடர்ந்து,போகலூர் ஒன்றியத்தில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் கதிரவன் ஆகியோர் ஏற்பாட்டில் சத்திரக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

23ம் தேதி  ராமேஸ்வரம் செல்லும் கனிமொழி எம்பி,  தனுஷ்கொடி, அப்துல் கலாம் இல்லம் செல்கிறார்.  தொடர்ந்து ராமேஸ்வரம் யாத்திரை பணியாளர், தங்கச்சிமடம் நாட்டுப்படகு மீனவர்கள்,  பாம்பன் கடல்பாசி சங்கு உற்பத்தியாளர்களை சந்தித்து உரையாடுகிறார். இதனைத்தொடர்ந்து,  தாமரைக்குளம் கிராமத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று, பிற்பகல் 3 மணிக்கு ராமநாதபுரம் மகளிர் சுய உதவி குழுகளை சந்திக்கிறார்.

ராமநாதபுரம் அரண்மனை முன்பு வேன் பிரசாரம், மார்க்கெட் பகுதிகளில் தேவிபட்டினம் நடைபயணம் சென்று பிரசாரம் செய்கிறார். 4 மணி அளவில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பூத் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம். 5 மணிக்கு, இரவு 8 மணிக்கு தொண்டி,இதனைத்தொடர்ந்து இறுதியாக   திருவாடானையில் வேன் பிரசாரம் மேற்கொண்டு தனது பிரச்சாரத்தை முடிக்கிறார்.

Related Stories:

>