டெல்லி: 2026ல் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் சூர்யகுமார் யாதவ், துணை கேப்டன் அக்சர் படேல் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. திலக்வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்குசிங், பும்ரா, ஹர்ஷித் ராணா உள்ளிட்டோருக்கு இடம். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை பிப்.7ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெற உள்ளது.
2026ல் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!!
- டி20 உலகக்கோப்பை தொடர்
- தில்லி
- இந்தியன்
- சூர்யகுமார் யாதவ்
- அக்சர் படேல்
- அபிஷேக் சர்மா
- சஞ்சு சாம்சன்
- அர்ஷ்தீப் சிங்
