இந்தியாவில் விரிவாக்கம் 10 ஆயிரம் பேருக்கு வேலை: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி: இங்கிலாந்தின் பாதுகாப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி துஃபான் எர்ஜின்பில்ஜிக் பிரதமர் மோடியை சந்தித்தார். இதனை தொடர்ந்து இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் தனது வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான மெகா திட்டத்தை நேற்று அறிவித்தது. இதனை தொடர்ந்து நேற்று எர்கின் பில்ஜிக் கூறுகையில்,‘‘அடுத்த தலைமுறை போர் ஜெட் இயந்திரத்தின் கூட்டு மேம்பாடு உட்பட பாதுகாப்பு மற்றும் எரிசக்தியின் முக்கிய துறைகளில் இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் வணிகத்தை விரிவுபடுத்த உள்ளது. இந்த லட்சிய முயற்சியின் கீழ் ரோல்ஸ் ராய்ஸ் பணியாளர்களின் அளவை இரட்டிப்பாக்குவதை விட அதிகமாக சுமார் 10000 பேரை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவை இங்கிலாந்துக்கு வெளியே அதன் மூன்றாவது மிகப்பெரிய சந்தையாக மாற்ற ரோல்ஸ் ராய்ஸ் முயற்சிக்கின்றது ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: