மதுரையில் போலீஸ் பூத்துக்குள் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை

மதுரை: மதுரை, நரிமேடு, மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் பூர்ணசந்திரன் (40). எம்பிஏ பட்டதாரியான இவர். மருந்து விற்பனை பிரதிநிதியாகவும், சரக்கு வாகனம் மூலமாக பழங்கள் விற்பனையிலும் ஈடுபட்டு வந்தார். நேற்று மாலை 3.30 மணியளவில் மதுரை மாநகராட்சி மற்றும் அவுட்போஸ்ட் பெரியார் சிலை அருகே பூர்ணசந்திரன் தான் ஓட்டி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தினார். திடீரென அங்குள்ள போலீஸ் பூத்திற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு, பெட்ரோலை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டார். பூர்ணசந்திரன் தற்கொலைக்கு முன்பாக பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றாததை கண்டித்து தற்கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார்.

Related Stories: