போபால்: தலசீமியா என்பது ஹீமோகுளோபின் உற்பத்தியை பாதிக்கும் ஒரு மரபணு ரத்தக்கோளாறு. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ரத்தம் செலுத்தப்பட வேண்டும். மத்தியபிரதேச மாநிலம் சத்னா, ஜபல்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரத்த வங்கியின் உதவியுடன் ரத்தம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தலசீமியா நோய்க்கு ரத்தம் செலுத்தி கொண்ட ஆறு குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 12 முதல் 15 வயதுக்குள்பட்ட குழந்தைகள். நான்கு மாதங்களுக்கு முன்பே(ஜனவரி மே) இது கண்டறியப்பட்ட போதிலும், தற்போதுதான் அதுகுறித்த தகவல் வௌிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் குழந்தைகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், ரத்த வங்கி மூலம் ஏற்றப்பட்ட ரத்தம் வழியேதான் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டதாக குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது குறித்து விசாரிக்க 6 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
