சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் சீர்குலைக்க முயற்சிக்கும் மதவெறி சனாதன சக்திகளை முறியடித்து தமிழ்நாட்டை பாதுகாப்பது ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அத்துடன், தற்போது நடைமுறையில் உள்ள நீதிபதிகள் நியமனத்துக்கான ‘கொலிஜியம்’ முறையை மாற்றிவிட்டு, அரசியல் தலையீடு இல்லாத புதிய முறை ஒன்றை உருவாக்கும்படி இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டியதும் அவசியமாகியுள்ளது. இந்த இரண்டு நோக்கங்களின் அடிப்படையில் இந்த ஆர்ப்பாட்டம் டிசம்பர் 22ம் தேதி மதுரையில் ஒருங்கிணைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
