பாஜ, என்.ஆர்.காங்.க்கு எதிராக அதிருப்தி அலை: புதுச்சேரி அரசுக்கு இந்த முறை டாடா?

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் இக்கூட்டணி தோல்வி அடைந்ததால் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு மாதந்தோறும் அரிசி உள்பட சில பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு போன்று மகளிர் உரிமை தொகை புதுவையில் வழங்குவது கிடையாது. சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள 90 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

அதிலும் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை மற்றும் பென்சன் வாங்குபவர்களுக்கு இந்த தொகை கிடையாது. இதனால் 2.5 லட்சம் குடும்ப தலைவிகள், மகளிர் உதவி தொகை கிடைக்காமல் அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். மூடப்பட்ட அரசு நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. பெரிய தனியார் நிறுவனங்கள், தங்களது கம்பெனிகளை மூடிவிட்டு தமிழ்நாடு பக்கம் சென்றுவிட்டனர். இதனால் வேலை வாய்ப்பு கிடைக்காமல் இளைஞர்கள் சென்னை மற்றும் சுற்றியுள்ள தனியார் நிறுவனங்களுக்கு படையெடுக்கின்றனர்.

ஆளும் அரசு மீது பெரும் அதிருப்தி அலை உருவாகி உள்ளது. இந்நிலையில் புதுவையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டு கடந்த முறை போன்று தொகுதி பங்கீடு செய்து கொண்டால் இக்கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பரவலான கருத்து நிலவுகிறது. மாநிலத்தில் உள்ள 30 தொகுதியில் ஒவ்வொரு தொகுதியிலும் திமுக, காங்கிரசில் 2க்கும் மேற்பட்ட ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிட ஆர்வம் காட்டுவதால் கடும் போட்டி நிலவுகிறது. தொடர்ந்து போட்டி போட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதால் வாக்காளர்கள் மகிழ்ச்சி கடலில் உள்ளனர்.

Related Stories: