ஆஸ்திரேலிய கடற்கரையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு; மக்களைக் காப்பாற்ற துணிந்த அஹமதிற்கு பிரதமர் ஆண்டனி பாராட்டு..!!

ஆஸ்திரேலியா: கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்கரை பகுதியில் யூத சமூகத்தை சேர்ந்த நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அங்கு புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தினர். நிகழ்ச்சி நடைபெற்றுவந்த இடத்தில இருந்த மக்கள் மீது மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். துப்பாக்கிசூடு தாக்குதல் நடந்து கொண்டிருந்த போது அங்கிருந்த ஒரு நபர் அச்சமின்றி செயல்பட்டு தாக்குதல்காரரை நேரடியாக எதிர்கொண்டார். ஆயுதம் எதுவும் இல்லாத நிலையிலும் அவர் உயிரை பொருட்படுத்தாமல் முன்னேறினார். பார்க்கிங் பகுதியில் நின்று துப்பாக்கிசூடு நடத்திய மர்ம நபர் மீது கார்களின் பின்னால் மறைந்து கொண்டு அருகே சென்ற அந்த நபர் சரியான தருணத்தில் பாய்ந்து துப்பாக்கியை பறித்தார்.

இந்த துணிச்சலான செயல் தொடர்பான 15 நிமிட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. துணிச்சலுடன் செயல்பட்ட நபர் 43 வயதான அஹமது அல் அஹமது என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த வழியாக நடைப்பயிற்சி நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது துப்பாக்கிசூடு நடப்பதை கண்ட அஹமது ஒரு நொடியும் யோசிக்காமல் களத்தில் இறங்கி தாக்குதல் காரரை கட்டுப்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் அஹமது மீதும் 2 குண்டுகள் பிணைந்துள்ளன. காயமடைந்த அஹமது உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்கள் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தன்னுயிரும் பொருட்படுத்தாமல் பல உயிர்களை காப்பாற்றிய அஹமதுவுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சிகிச்சை பெற்று வரும் அஹமதை நேரில் சந்தித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் நலம் விசாரித்து அவரது துணிச்சலுக்கு பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: