கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது வெற்றியை மிகைப்படுத்தி கூறுகிறது : காங்கிரஸ் கருத்து

புதுடெல்லி: டெல்லியில் நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கேரளாவில் மொத்தம் 1,199 உள்ளாட்சி இடங்களில் பாஜ முந்தைய தேர்தலை விட 8 இடங்கள் மட்டுமே அதிகமாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கேரளாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். அவர்கள் திருவனந்தபுரம் மாநகராட்சியில் வெற்றி பெற்றுள்ளதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அந்த மாநகராட்சியை தவிர திருவனந்தபுரம் மாவட்ட பஞ்சாயத்தில் ஒரு இடத்தை கூட அவர்கள் பிடிக்கவில்லை.

2020 உள்ளாட்சி தேர்தலுடன் ஒப்பிடும் போது 2 நகராட்சிகளை அவர்கள் வென்றாலும், பாலக்காடு, பண்டலம் நகராட்சிகளை இழந்துள்ளனர். 2020ல் 21 இடங்களில் வென்ற அவர்கள் இப்போது 29 இடங்களை கைப்பற்றி உள்ளனர். ஆனால் கேரளாவே பாஜவை நோக்கி நகர்வதாக தவறான பிம்பத்தை உருவாக்கி மக்கள் மனநிலையை மாற்ற பிரதமரும் மற்றவர்களும் முயற்சிக்கின்றனர். கேரளாவில் பாஜவின் வெற்றிக்கு மாநில முதல்வர் பினராய் விஜயனின் அரசு தான் காரணம் என்றார். கோழிக்கோடு, மலப்புரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி ஊர்வலத்தின் போது ஸ்கூட்டரில் வைத்திருந்த பட்டாசு வெடித்து 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Related Stories: