சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள். நவ.4ஆம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ம் தேதி வெளியிடப்படும். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மூலம் இதுவரை 99.55 சதவீத படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
