குன்னம்,டிச.13: கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஆறுமுகம் முன்னிலையில் வேப்பூர் கிழக்கு ஒன்றியம் மாவட்ட பிரதிநிதி பழனிவேல், அப்பள்ளியின் மூத்த தமிழ் ஆசிரியர் பிரபாகரன், மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் லெட்சுமி ஆகியோர் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 73 பேருக்கு இலவச மிதிவண்டி வழங்கினார்கள். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி
- கீழப்பரம்பலூர் அரசு பள்ளி
- குன்னம்
- கீழப்பரம்பலூர் அரசு உயர் மேல்நிலைப் பள்ளி
- குன்னம் தாலுக்கா, பெரம்பலூர் மாவட்டம்
- வேப்பூர் கிழக்கு...
