மொழி திணிப்புக்கு பல்கலைக்கழக மானியக்குழு துணை போகக்கூடாது: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை; பல்கலைக் கழக மானியக் குழுவின் செயலாளர் மணிஷ் ஜோஷி கடந்த 2ம் தேதி மத்திய பல்கலைக் கழகங்கள், மாநில பல்கலைக் கழகங்கள், தனியார் பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் மாணவர்களும், ஆசிரியர்களும் மூன்றாவதாக ஒரு மொழியை கட்டாயமாக கற்க வேண்டும் என வழிகாட்டல் உத்தரவு வழங்கியுள்ளார். இதை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது என்பதை கருத்தில் கொண்டு, பல்கலை மானியக் குழு, தனது உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.

Related Stories: