சென்னை: இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6ம் தேதி தொடங்கியது. அதன்பிறகு, மார்ச் 14ம் தேதி 2025-26ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதமும் நடந்தது. தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் நடந்து முடிந்தது. அதன்பிறகு, கடந்த அக்டோபர் 14ம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், \”கடந்த ஜனவரி 6ம்தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடித்து வைக்கப்படுகிறது\” என்று தெரிவித்துள்ளார்.
