மத நல்லிணக்கம், பொது அமைதியை கருத்தில் கொள்ள வேண்டும்: அரசு தரப்பு வாதம்

மதுரை: மத நல்லிணக்கம், பொது அமைதியை கருத்தில் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பு வாதம் வைக்கப்பட்டது. 74 ஆண்டுகள் அமைதியாக இருந்தது; 1994க்கு பிறகுதான் மீண்டும் தீபம் தொடர்பான பிரச்சனை எழுந்தது. 2014ம் ஆண்டு உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிக்கந்தர் தர்கா இடம் மாற்றம் செய்ய வேண்டுமென சிலர் துண்டறிக்கை வெளியிட்டனர்;அதனால்தான் பிரச்சனை ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ளது தீபத் தூண் அல்ல. திருப்பரங்குன்றம் உச்சி பிள்ளையார் அருகே தீபம் ஏற்றுவதுதான் வழக்கம்; அதனால் அங்கு ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலையில் மற்ற இடங்களில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கக் கூடாது.மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை என்றும் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

Related Stories: