பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்

கெங்கவல்லி, டிச.12: வீரகனூர் அருகே லத்துவாடி மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் புவனேஸ்வரி(19), இவர் தலைவாசல் தனியார் கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சிரண்டிபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் சக்திவேல்(22), முடிதிருத்தும் தொழிலாளருடன், புவனேஸ்வரிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில், கடந்த 8ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய புவனேஸ்வரி, சக்திவேல் வீட்டில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், பாதுகாப்பு கேட்டு நேற்று வீரகனூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து வீரகனூர் எஸ்ஐ சக்திவேல், இருவரின் பெற்றோர்களை நேரில் வரவழைத்து சமாதானம் செய்து, பெற்றோர்களுடன் காதல் ேஜாடியை அனுப்பி வைத்தனர்.

Related Stories: