அடிப்படை வசதியுமின்றி மக்கள் அவதி திருக்குறளின் நற்சிந்தனைகளை மாணவர்களிடம் பரப்ப வேண்டும்

மன்னார்குடி, ஜன. 17: உலக பொதுமறை திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம்தேதி திருவள்ளுவர் தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக திருவள்ளுவர் பொது நல அமைப்பு சார்பில், 15ம் ஆண்டு திருவள்ளுவர் தினவிழா அமைப்பின் தலைவர் ராஜ்குமார் தலைமையில் மன்னார்குடியில் நடைபெற்றது. டாக்டர் அசோக்குமார், சுனில் லுங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிகளை, திருவள்ளுவர் பொது நல அமைப்பு நிறுவனர் தெட்சிணாமூர்த்தி தொகுத்து வழங்கினார். விழாவில் எஸ்பி டாக்டர் துரை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிலம் பாட்டம், பரதம், தவில், சுற்றுச் சுழல் ஆர்வலர், வீடு வீடாக சென்று செய்தித் தாள்கள் விநியோகம் செய்பவர்கள் என பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.

பின்னர், எஸ்பி துரை பேசுகையில், உலக பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை தந்து வான் புகழ் பெற்றவர் திருவள்ளுவர். திருக்குறளில் இல்லாத கருத்தே இல்லை என்பது அறிஞர்களின் கூற்றாக உள்ளது. இதன் பெருமையை உணர்ந்து பல்வேறு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வருங்காலங்களில், திருக்குறளின் நற்சிந்தனைகளையும் குறள் காட்டும் நல் நெறிகளையும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரப்பும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் ஒவ்வொ ருவரும் உறுதியேற்க வேண்டும் என்றார். முன்னதாக, பொருளாளர் மன்றம் மோகன் வரவேற்றார். சமூக ஆர்வலர் செழியன் நன்றி கூறினார்.

Related Stories:

>