கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

கூடலூர்: மூணாறு அருகே, அடிமாலியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், அடிமாலியில் போதை தடுப்பு சிறப்பு படைப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராகுல் சசி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, சாத்துப்பாறை 14வது மைல் அருகே, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 3 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 380 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் அவர்கள் சாத்துப்பாறையைச் சேர்ந்த அகிலேஷ், அபினவ், கூத்துபாறையைச் சேர்ந்த ஆல்வின் எனவும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: