கும்பகோணம்: கும்பகோணத்தில் போலியாக ஆதார் அட்டை, பான் அட்டை அச்சடித்து கொடுத்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அண்மையில் வழக்கில் சிக்கிய குற்றவாளி தந்த ஆதார் அட்டை போலியாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். குற்றவாளியை தீவிரமாக விசாரணை நடத்தியபோது கம்ப்யூட்டர் சென்டரில் வாங்கியது அம்பலம் ஆகியுள்ளது. கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் அப்துல் காதரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
