வாழப்பாடி, டிச.8: அயோத்தியபட்டணம் தெற்கு ஒன்றியம், எம்.பெருமாபாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் உதயா படிப்பகம் என்ற அறிவு சார் மைய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் அறிவுசார் நூலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் நாகராஜ், அன்னக்கொடி மனோசூரியன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சாந்தி பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
