சேலம் இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் இடமாற்றம்

 

சேலம், மார்ச் 9: தமிழ்நாடு ரயில்வே போலீசில் சேலம், அரக்கோணம் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6 பேர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி காவல்துறையில் இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்கள், எஸ்பிக்கள் என அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில், ரயில்வே உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணியாற்றி வரும் 50 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து, டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வகையில், தமிழ்நாடு ரயில்வே போலீசில் சேலம் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் கோமதி, அரக்கோணம் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, திருச்சி இன்ஸ்பெக்டர்கள் ஷீலா, சாந்தி, மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் ஆகியோர் சென்னை மாநகர போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல், பிற பிரிவுகளில் இருந்து ரயில்வேக்கு 6 இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணி ஒதுக்கீடு இன்னும் வழங்கப்படவில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: