தண்டவாளத்தில் வெடிபொருள் பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் மீது தாக்குதல் முயற்சி முறியடிப்பு

 

கராச்சி: பாகிஸ்தானில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீதான தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நசிராபாத் பகுதியில் இருந்து பெஷாவர் செல்லும் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் வெடிபொருள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மற்றொரு ரயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

பின்னர் வெடிபொருள் குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு படையினர், அந்த பகுதியை சுற்றி வளைத்து, வெடிபொருளை செயலிழக்க செய்தனர். பின்னர் நிலைமை சீரடைந்ததும் இரண்டு ரயில்களும் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்றன.

Related Stories: