சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதேநிலை 9ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும்.
கிழக்கு திசையில் இருந்து காற்று வீசுவதால் நாளை முதல் 11ம் தேதி வரை த மிழக கடலோரப் பகுதிகளி் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது. 10ம் தேதி தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளிலும், 11ம் தேதியில் தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும்.
