போடி, டிச.6: போடியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.போடி தாலுகா காவல்நிலைய எஸ்.ஐ விஜய் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். போடி அருகே மீனாவிலக்கு தாசன்செட்டி கண்மாய் அருகே சென்றபோது, தேனி மெயின் ரோட்டை சேர்ந்த ராஜேஷ்குமார் (எ) ஒச்சு(42) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர்.
மேலும் அருகே அணைக்கரைப்பட்டி சுடுகாடு அருகே கண்காணித்தபோது, காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் கோபி(27) கஞ்சா பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அவரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
