வருசநாடு, டிச.6: மாநில தோட்டக்கலை அபிவிருத்தி 2025-26ம் ஆண்டு திட்டத்தின் கீழ் க.மயிலாடும்பாறை வட்டாரத்தில் தென்னை சாகுபடி பயிருக்கு மானியத்தில் ரூக்கோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் நிற அட்டை பொறிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் கடமலைக்குண்டு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மேகமலை வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள் அனைவரும் கடமலைக்குண்டு தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது பொது இ.சேவை மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தவறாமல் நில உடமை (விவசாய அடையாள அட்டை) பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
