அருணை தமிழ்ச்சங்கம் சார்பில் இன்று 39 வார்டுகளில் கோலப்போட்டி எ.வ.வேலு தகவல்

திருவண்ணாமலை, ஜன.13: திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில், அருணை தமிழ்ச்சங்கம் சார்பில் கோலப்போட்டி நடத்தப்படுகிறது. இதுகுறித்து, அருணை தமிழ்ச்சங்க தலைவர் எ.வ.வேலு தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளிலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அருணை தமிழ்ச்சங்கம் சார்பில் கோலப்போட்டி நடத்தப்படுகிறது. போகிப்பொங்கல் திருநாளான இன்று இரவு 10 மணிக்குமேல், ஒவ்வொரு வார்டுக்குமான நடுவர் குழுவினர் கோலங்களை நேரில் பார்வையிடுவார்கள்.

ஒவ்வொரு வார்டிலும் முதல் 3 பரிசுகள் மற்றும் 5 ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். அதன்படி, முதல் பரிசு ₹6 ஆயிரம் மதிப்பில் வாஷிங் மெஷின், 2வது பரிசு ₹3,500 மதிப்பில் காஸ் ஸ்டவ், நான்ஸ்டிக் தவா, 3வது பரிசு ₹2,500 மதிப்புள்ள மிக்சி குக்கர் மற்றும் ₹1,000 மதிப்புள்ள ரைஸ் குக்கர் ஆறுதல் பரிசாக வழங்கப்படும்.பரிசுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, வரும் 20ம் தேதி நடைபெறும் அருணை தமிழ்ச்சங்க விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வழங்குகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>