கரூர் நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

டெல்லி: கரூரில் செப்.27-ம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி அக்டோபரில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்துள்ளது.

கடந்த அக்டோபர் 13-ம் தேதி கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணை குழு, தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தையும் ரத்து செய்து. வழக்கை முற்றிலுமாக சிபிஐக்கு மாற்றி இடைக்கால உத்தரவு பிறபித்தது. மேலும் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், கரூர் நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட சிறப்பு விசாரணை குழுவே விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும். உச்ச்நீதிமன்ற மேற்பார்வை குழுவை மாற்றி அமைக்க வேண்டும். நீதிபதி அருணா ஜெகதீசன் குழுவின் விசாரணைக்கு தடை விதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டு பூர்வீகமல்லாத அதிகாரி விசாரிக்க வேண்டும் என்ற வார்த்தை நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: